Monday, 3 July 2017

இலங்கையின் குடியேற்றங்கள்



இலங்கையின் குடியேற்றங்கள்

இலங்கையில் ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் (125000) ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் மனிதன் வாழ்ந்திருந்தான்.
இந்து சமுத்திரத்தை கடந்து வந்து  பிளைத்தோசீன் எனப்படும் மனித ஊழியக் காலத்தில் ஹோமோசேப்பியன் என்னும் நவீன மனிதன் நாட்டின் நாலா பக்கங்களிலும் பரவி வாழ்ந்து வந்துள்ளான். 


இலங்கையில் மானிட வாழ்க்கை வரலாறுஇ தொழிநுட்பம் இ வாழ்க்கை முறை என்ற அடிப்படையில் மூன்று கால கட்டங்களாக வகுக்கப்படுகின்றது.
1.வரலாற்றுக்கு முற்பட்டகாலம் 
2.முன் வரலாற்றுக்காலம்
3.வரலாற்றுக்காலம்
என எடுத்து நோக்கப்படுன்றது.

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் 

    அறிமுகம்

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பது எழுத்து மூலாதாரங்கள் அன்றி ஆவணப்படுத்தப்பட்ட மூலாதாரங்கள் அன்றி தொல் பொருட் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு வரலாறு கணிக்கப்பட்ட காலம் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் ஆகும். 
ஏறத்தாழ (கி.மு 125000 – 1800) வரையான காலம் ஆகும் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பது நீண்ட காலம் நிலைத்திருந்த கற்காலம் ஆகும்.
இலக்கிய மூலாதாரங்களில் குறிப்பிடப்படும் புராதன காலத்திற்கு முன்னைய காலம் பொதுவாக வரலாற்றுக்கு  முற்பட்டகாலம்  எனப்படுகின்றது. வரலாற்றுக்கு முற்பட்ட காலம் பற்றி  நோக்குகையில் 
குடியேற்றங்களின் பரம்பல்
வரலாற்றுக்கு முற்ப்பட்ட கால இலங்கையில் மனிதன் வாழ்ந்த இடங்கள்
காலநிலை வலயங்களில் குடியிருப்புகளின் பரம்பல்
வரலாற்றுக்கு முற்பட்ட கால கட்டங்கள்
குடியிருப்புக்களின் அடிப்படை இயல்பு
வாழ்க்கை முறை
உணவூ ப்பழக்கம்
எழும்பு கூடுகள்
தொழில்நுட்பம்
மனிதனின் உடலமைப்பு
சடங்கு சம்பிரதாயமுறை 
போன்ற அடிப்படையில் நோக்கலாம். 
குடியேற்றங்களின் பரம்பல்


இலங்கையில் ஆதி மனிதன் ஹோமோசேப்பியன் இன மனிதனே முதலில் குடியேறியூள்ளான்
வேட்டையாடுதல்இ இடத்துக்கிடம் நகர்ந்து உணவூ சேகரித்தல் என்பன பிரதான ஜீவனோபாயமாக காணப்பட்டது.
இலங்கையில் கற்காலத்திற்குரிய ஆதாரங்கள் கிடைக்கப்பெறுகின்ற இடங்களாக 
1. இரத்தினபுரி  
2. இரணைமடு  
கற்காலத்திற்குரிய கல்லாயூதம் கிடைக்கப்படுகின்றது.
இரத்தினபுரி இரணைமடுப் படிவூகளை பிளைத்தோசீன் என்னும் புவியியற் காலத்திற்குரியதாகும்
               இரத்தினபுரி படிவூ
கற்காலத்திற்குரிய முதலாவது ஆதாரம் கிடைக்கப் பெற்ற இடமாக இரத்தினபுரி மற்றும் அதன் அயற் சூழலில் அமைந்துள்ள இரத்தினக்கல் சுரங்கமாகும் 
இரத்தினபுரி படிவூ பிளைத்தோஸின் என்னும் புவியியற் காலத்திற்கு உரியதாகும்.
சுமார் 90 அடி ஆழத்தில் இரத்தினக் கனிய படிவூகளில் காணப்படும் சரளைக் கற்களுடன் கூடிய மண் படைகளில் மிகப் புராதன காலத்தில் வாழ்ந்த 
   மனிதன் பயன்படுத்திய கல்லாயூதங்கள் 
   இல்லாது அழிந்து போன என்புக்கூடுகள் 
   என்பன பிளைத்தோஸின் காலத்திற்கு ஏற்றவையாக காணப்படுகின்றன

              இரனைமடு படிவூ
பெரும் பனிக் காலத்தில் பூமியில் பெரும் மாற்றங்கள் இடம் பெற்றது கடற்கரையிலிருந்து 32 கிலோமீற்றர் தூரம் வரை நாட்டின் உட்பிரதேசத்தில் தாழ் நில படிவூகள் படிந்துள்ள மண்படையினைக் காணமுடிகின்றது. அது இரணைமடுப்படிவூ என அழைக்கப்பட்டது.
இம்மண்படிவூ முதன் முதலாக இரணைமடுக் குளத்தின் சூழலிலே கண்டு பிடிக்கப்பட்டது.
வரலாற்றுக்கு முந்திய கால கல்லாயூதங்கள் புதைக்கப்பட்டுள்ளது
இரணைமடுப் படிவூகளில் கற்காலத்திற்குரிய கல்லாயூதம் கிடைக்கப்படுகின்றது
இலங்கையில் அதிவறண்ட வலய நிலத்தடியில் களிமண்ணுடன் கூடிய மணல் மண்ணிணால் மூடப்பட்டுள்ள சரளைக் கற்படிவூகள் காணப்படுகின்றன இதனை தொல்பொருளாளர்கள் இரனைமடுப் படிவூ என அழைத்தனர் 
இரணைமடுப் படிவூகளை பிளைத்தோசீன் யூகத்தின் சிறு உஷ்ண காலத்திலேயே நிலத்தில் புதைந்துள்ளது

  ஹோமோசேப்பிய மனிதனின் வருகை
ஹோமோசேப்பியன் என்னும் நவீன மனிதன் மனித பரிணாமத்தில் மிக முக்கியமான அடையாளம் ஆவான்.
நவீன மனித குலம் ஹோமோசேப்பியன் என்றே அழைக்கப்பட்டது
நவீன மனித குலத்தின் முதல் மனிதன் தோன்றியது இற்றைக்கு ஜந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னதாகும் (500000 - 200000) இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த இவ் மனிதன் நவீன பிளைத்தோஸின் என்னும் காலப்பரப்பில் தோற்றம் பெற்றான். என தொல்லியல் ஆய்வாளர்கள் கணிப்பிடுகின்றனர்.


       வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதன் இலங்கையில் வாழ்ந்த இடங்கள்
பொலனறுவை          பிபிலை             பூநகரி           பாலாவி     
கம்பளை              பரந்தன்             புத்தளம்         மடுல்சீமை        
இரணைமடு            ஆணைமடு            வலிமடை        முல்லைத்தீவூ
  ஆண்டிகம             பூண்டுலோயா         வெள்ளங்குளம்     பள்ளம 
  நாவலப்பிட்டி           மாங்குளம்            பங்கரதனியா      கித்துல்கல 
  முருங்கன்             சிலாபம்             பெலிதலள       அத்துல 
  நாச்சியார்             வெள்ளச்சிமலை       தம்புள்ளை        அவிசாவல
  திருகோணமலை         தம்மன்னா           பியகம          குதிரைமலை           
  பிதுறுங்கல்             களனி             மாப்பாகல        மல்வானை 
   வில்பத்து              பொத்தான           கற்குஹத்த       அனுராதபுரம்
   அலகொலவெல          பட்டதொட்டலென       சன்னன்குழி       வேவல 
   திம்புலை              பொம்பரிப்பு           கருதிய          டிக்கோலா           
   கலாஒயா              கண்டி             பொகுன          சிவனொலிபாதமலை 
   வண்ணாத்திவில்லு       பேராதனை           மய்லெயா       கந்தக்காடு 
   தானிகல              நோர்வூ+ட்            திருகோணமடு    ஹேனெபொத்த
   நூவரெலியா           அணைக்கல்          றின்கல         பண்டாரவளை      
   குமண               அம்பாந்தோடை        இராவணாஎல்ல    உடபொத்த      
   எஹலியவத்த          தெலுள்ள            எல்லாவல       தியவன்ன 
   குறுவிட்ட             கஹவத்த            பட்டதொம்பவெல   குக்குலேகம    
   களுகங்கை           பதுரலிய             இரத்தினபுரி       கலவானை 
   பெலிகுல்ஒய          வளவகங்கை           உக்கல்கல்       தொட்ட       
   திஸ்ஸமகாராமை       அலுகல்கே           தெலுல்ல         யால 
   புத்தல               ப+ந்தல              ஒக்கம்பிட்டிய      அம்பலாந்தோட்டை
   பொத்துவில்           வலிபட்டன்வில         குடும்பிகல        ஹங்கம 
   லேகம               ரண்ண              பம்பரகஸ்தலாவ    தங்காலை 


  இவற்றுள் வரலாற்றுக்கு முற்பட்ட கால அகழ்வாய்வூ செய்யப்பட்ட இடங்களாக
மாந்தைஇ அலிகலஇ பொதானஇ பிதுமன்கலஇ நில்கலஇ மானியன்கமஇ ராவாணாஎல்லஇ படதொம்பலனஇ தியரின்னஇ மினிகாகல்கந்தஇ புந்தலஇ அலுகல்கேஇபாஹியன்கலஇ பெல்லன்பதிபொலஸ்ஸhttp://study.com/academy/lesson/prehistory-definition-and-timeline.html

           வரலாற்றுக்கு முற்பட்ட கால காலகட்டம்
தென்மாகாணத்தின் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் பத்திராஜவெல பிரதேசத்தில் நிலமட்டத்தில் இருந்து 45 அடி ஆளத்தில் இரணைமடுப்படிவூக்குரிய சரளைக்கற்படிவூ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இது 125000 ஆண்டு பழைமையானது என கணிக்கப்படுகிறது

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் éந்தல வெல்லே கங்கொட பிரதேசத்தில் நிலமட்டத்தில் இருந்து 24 அடி ஆளத்தில் கல்லாயூதம் கூடிய சரளைக்கற்படிவூ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இது 80000 ஆண்டு பழைமையானது என கணிக்கப்படுகிறது
இலங்கையில் இக் கலாச்சாரம் நிலவிய மையங்கள் சில
பாகியன் கல           - 38000 வருடங்கள்
குருவிட்ட பட்டதொம்பலன  - 28000 வருடங்கள்
கித்துள்கல அலிலென     - 15000 வருடங்கள்
பெல்லன்பதிபெலஸ்ஸ     - 12000 வருடங்கள
அத்தனகொட அலுலென   - 10350 வருடங்கள்
மானியம் கம           - 7900 வருடங்கள்
சீகிரியா அலிகல        - 5500 வருடங்கள்
சீகிரியா பொத்தான      - 5800 வருடங்கள்
உடமல்ல             - 533;0 வருடங்கள்
ஹெனகஹபு கல        - 3370 வருடங்கள்
மாதோட்டை            - 3800 வருடங்கள்https://www.youtube.com/watch?v=Mm-IxK1GrYE


காலநிலை வலயங்களில் குடியிருப்புக்களின் பரம்பல்
இலங்கையில் கற்கால மனிதனின் காலநிலை வலயங்கள் மழைவீழ்ச்சி;யை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்பட்டது 
1. தாழ்நில அதி வரல் வலயம்
2. தாழ்நில குறை வரல் வலயம்
3. தாழ்நில உலர் வலயம்
4. தாழ்நில இடை உலர் வலயம்
5. தாழ்நில இடை ஈர வலயம்
6. மலைநாட்டு இடை உலர் வலயம்
7. மலைநாட்டு ஈர வலயம்
8. உயர் மலைநாட்டு ஈர வலயம்
கற்கால மனிதனின் காலநிலை வலயமானவை
        உணவூப்பழக்கவழக்கம்
        தொழிநுட்பம்
என்பனவற்றின் அடிப்படையில் வேறுபடுகின்றது.
      உதாரணம்:-  தாழ்நில ஈரவலயத்தில் :- உணவாக நத்தையூம்
               தாழ்நில உலர்வலயத்தில் :- மான்இ உடும்பு
களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள எனும் இடத்தில் அமைந்துள்ள பாகியன் கல குகை 35000 முன்னர் மனிதன் வாழ்ந்த தாழ்நில ஈரவலயம் ஆகும் 





குடியிருப்புக்களின் அடிப்படை இயல்பு

இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலக் குடியிருப்புக்கள் ஒன்றுக் கொன்று வேறுபட்ட சூழலுக்கு அமைய பரவலடைந்து காணப்பட்டது.
வரலாற்றுக்கு முற்பட்ட இவ்யூகத்தில் இடத்துக்கிடம் அலைந்து திரிந்து நாடோடி வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.
வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதன் இயற்கை வளங்கள் ஏராளமாகக் கிடைக்கூடிய இடங்களில் அவர்கள் வாழ்க்கைகள்
      உதாரணம் :- தாழ்நில மாழைக்காடுகள்
                வில்லுப்புல் நிலங்கள்
                உலர்வலயக்காடுகள்
        கரையோரங்களின் களப்புகள்
          மலைநாட்டின் புல்நிலங்கள்
ஆகிய இடங்களில் வாழ்ந்துள்ளனர்.
வெப்பமான காலநிலைப் பருவங்களில் வெட்ட வெளியிலும் மழைக் காலங்களில் இயற்கைக் குகைகளிலும் வாழ்ந்துள்ளனர். 
அவ்வாறான வெட்டவெளிஇ கற்குகைகள் இடங்கள் 
1. கரையோர வெட்ட வெளிகள்     -       மினிஹாகல்கந்தஇ புந்தலஇ பத்திரிராஜா வெல 
2. தாழ்நில ஈரவலயக் குகைகள்     - பாகியன்கலஇ பட்டதொம்பவெலனஇ கித்துல்கல பெலிலென 
3. தாழ்நில உலர் வலயக் குகைகள்  - சீகரிய பொத்தானஇ அலிகல 
4. தாழ்நில உலர்வலய வெட்ட வெளிப்பாறைகள் - பெல்லன்பதி பெலஸ்ஸ 
5. மலையகப் பிரதேச வெட்டவெளி வேட்டை நிலம் - பண்டாரவளைஇஹோட்டன் சமவெளி

             
வாழ்க்கைமுறை

வேட்டையாடி இடத்துக்கு இடம் அலைந்து திரிந்து நாடோடி வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.
குழுக்களாக வாழ்ந்துள்ளனர் பொதுவாக ஒரு குழுவில் 15 – 25 நபர் அடங்கியிருந்தனர்
ஒரு குழுவில் ஆகக் கூடுதலாக 50 நபர் அடங்கியிருந்தனர்
05 நபர்களைக் கொண்ட ஒரு குடும்பம் வாழ்வதற்கு 50 சதுர மீற்றர் பரப்பளவூ தேவைப்பட்டது
பண்டாரவளை சேர்ச்ஹில் எனும் கற்காலத்திற்குரிய இடத்தில் 150 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் சுமார் 25 நபர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகின்றது.
பெல்லன்பதி பெலஸ்ஸ எனும் இடத்தில் 120 சதுரமீற்றர் பரப்பில் கற்கால மனிதன் வாழ்ந்ததற்கான 30 மனித எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

                   
மனித எழும்பு கூடுகள்
பெல்லன்பதி பெலஸ்ஸவில் 30 மனித எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கித்துள்கல பெலிலனவில் 12 மனித எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
பாகியன் கலவில் 09 மனித எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
சீகிரிய பொத்தானக் குகையில் 01 மனித எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
குருவிட்ட பட்டதொம்பலெனவில் ஒரு வளைந்த மனித எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது 







                   


             உணவூப்பழக்கவழக்கங்கள்

இலங்கையின் கற்கால மனிதன் உட்கொண்ட உணவூ பற்றி ஆதாரங்கள் தாழ்நில உலர் வலயத்திலும்இ ஈரவலயத்திலும் காணப்படும் கற்குகைகளில் கண்டு பிடிக்கப்பட்டன.
வேட்டையாடப்பட்ட மிருகங்களாக மாடுஇ காட்டெருமைஇ கரடிஇ காட்டுப்பன்றிஇ முயல்இ மரஅணில்இ கீரிஇ குரங்குஇ காட்டுக்கோழிஇ  மலைப்பாம்புஇ மான் இ மரைஇ சிறுமான் இ முள்ளம் பன்றிஇ உடும்பு என்பன உட்கொள்ளப்பட்டது.
தாழ்நில ஈரவலயங்களில் “தித்தயா” போன்ற நன்னீர் மீனினங்கள் அவர்களால் பிடிக்கப்பட்டன.
காட்டுவாழைஇ காட்டுப்பலா(ஆனிப்பலா) போன்ற தாவர உணவூகளும்
வள்ளிக்கிழங்கு வகைகள்இ கித்துள் விதைஇ காட்டுப்பாக்கு போன்ற கொடி உணவூகளும் உட்கொள்ளப்பட்டுள்ளது. 
கித்துள்கல பெலிலென எனும் இடத்தில் 125000 ஆண்டுகளுக்கு காட்டுப்பலா விதைகளை தீயில் சுட்டு சாப்பிட்டுள்ளான்.
உணவூத் தேவைக்காக உப்பினைப் பயன்படுத்தி உள்ளான்.
        உதாரணம் :- கித்துள்கல பெலிலெனவில் நத்தை எச்சத்துடன் உப்பு கலந்திருத்தல்.

                தொழில்நுட்பம்
இலங்கையின் கற்கால தொழினுட்பம் பற்றிய அறிவினைப் பெற உதவூவது கேத்திர கணிதப் பொறிமுறை உருவத்திலான நுணுக்கமான கல்லாயூதங்கள் என்று தொல் பொருளாளர்களால் குறிப்பிடும் கல்லாயூதங்கள் ஆகும் 
இரனைமடுஇஇரத்தினபுரி மாணிக்க சுரங்கத்திலும் கிடைக்கப் பெறும் கல்லாயூதங்களைக் கொண்டு முழுமையான தொழினுட்ப nறிவினை பெற முடியாதுள்ளது
4.5 சென்றிமீற்றர் நீளமுடைய சிறிய கல்லாயூதங்களை பயன்படுத்தி உள்ளான்.
வேட்டையாடுதல்இவெட்டுதல்இ உராய்தல்இ தட்டையாக்குதல்;இ தோண்டுதல் என்பவற்றிற்கு கல்லாயூதம் பயன்படுத்தல்.
சுத்தியல்இ அம்மிஇ போன்றன தயாரிக்கப்படுதல்.

              மனிதனின் உடலமைப்பு
வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதனின் ஆகக்கூடிய ஆயூட்காலம் 35 – 40 வயதாகும்.
வரலாற்றிக்கு முற்பட்டகால சாதாரண வளர்ச்சியடைந்த ஆண் ஒருவரின் உயிரம் 174 சென்றிமீற்றர் 
பெண் ஒருவரின் உயிரம் 166 சென்றிமீற்றர் ஆகும்.
வளர்ந்த ஆணின் மூளையின் அளவூ 1600 கன சென்றிமீற்றர் 
வளர்ந்த பெண்னொருவரின் மூளை 920 கன சென்றிமீற்றர் ஆகும்.
இலங்கையின் வரலாற்றுக் காலத்திற்குரிய எலும்புக் கூடு ஒன்றை சிகிரியாவூக்கு அண்மையில் பொத்தான கற்குகையில் கண்டுபிடிக்கப்பட்டது

             
                சடங்கு சம்பிரதாயம்
மரணச்சடங்கு முறைகள் சிறப்பாக  இடம் பெற்றுள்ளது.
பதுளைக்கு அண்மையில் உள்ள இராவண எல்லவில் மரணச்சடங்கு முறைகள் சிறப்பாக  இடம் பெற்றுள்ளது.
எலும்புக்கூடுகள்pல் சிவப்பு நிறமான பாறையை உராய்ந்து éசப்பட்ட எலும்புக் கூடுகள்  நிறம் பாகியன் கலவில் காணப்படுகின்றது
             
                   கற்காலம்
இலங்கையின் ஆரம்பக் குடியேற்ற வாசிகளின் கலாசாரப் பண்பாடு நிலவிய காலம் கற்காலம் எனப்படும்.
கற்காலத்தில் வேட்டையாடுதல்இ அலைந்து திரிந்து உணவூ உணவூ சேகரித்தல் பிரதானமாக காணப்பட்டது.
             


முன் வரலாற்றுக்காலம்;

மட்பாண்டம் வனைதல்இ மயானங்களைப் பயன்படுத்தல் இரும்பு உலோகத்தைப் பயன்படுத்தல்
என்பன இக்காலத்தில் ஆரம்பமானதால் முன் வரலாற்றுக்காலம் எனப் பெயரிடப்பட்டது
முன் வரலாற்றுக் காலத்தை மத்திய கற்காலம் எனவூம் அழைத்தனர் 
கி.மு. 1800 – 500 வரையான காலம் முன் வரலாற்றுக் காலம் ஆகும்.
வரலாற்றுக்கு முற்பட்டகால முடிவிற்கும் வரலாற்றுக்காலத்தின் ஆரம்பத்திற்கும் இடைப்பட்ட காலமே முன் வரலாற்றுக் காலம் எனப்படுகின்றது
இக்காலம் இடைக்காலம் என அழைக்கப்படுகின்றது. 
மரணச்சடங்கு முறையூம் சுடப்பட்ட மட்பாண்டங்களின் பாவனையின் ஆரம்பமும் இக்காலமாகும்.
இரும்பின் உபயோகப்பாவனை உபயோகம் இக்காலத்தில் ஆரம்பமாதல்
கல்லாயூதங்கள் முழுமையாக கைவிடப்பட்டது முன் வரலாற்றுக் காலத்தின் இறுதியிலாகும்.
இரும்பின் பாவனை ஆரம்பிக்கப்பட்டமையால் இக்காலம் முன்வரலாற்று இரும்பு யூகம் என்றும் ஆரம்ப இரும்புயூகம் என்றும் அழைக்கப்பட்டது

                  ஹொலோசீன் யூகம்
இது ஒரு புவியியல் யூகம் ஆகும். கி.பி 5000 - 4000 இடைப்பட்ட காலப்பகுதி இதுவாகும்.
இக்காலத்தில் உலோகப்பாவனை தாவர உணவூகளை உட்கொள்ளல் முக்கியமானதாகும்.
தென்னாசியா முழுவதும் காலநிலை மாற்றத்தால் பாரிய மாற்றம் ஏற்பட்டது.
இலங்கையின் முன் வரலாற்றுக் காலம் பற்றிய தகவல்கள் (கி.பி 2400 ஆண்டு) சப்பிரமுவ மகாணத்தின் வட கிழக்கு பகுதியில் கிடைக்கப் பெற்றுள்ளது.

       முன் வரலாற்றுக் காலம் பற்றிய தகவல் கிடைக்கப்பெற்ற இடங்கள்
முன் வரலாற்றுக்கு காலத்துக்குரிய மயானங்களை அடிப்படையாகக் கொண்டு முன் வரலாற்றுக் காலத்தின் மக்கள் வாழ்விடங்களை அறிந்து கொள்ள முடியூம்.
முன் வரலாற்றுக் காலத்தில் 
      1.களிமண் ஒடக்கல்லறை மயானம்
      2.அஸ்தி வைக்கப்பட்ட கல்லறை மயானம்
      3.மெகாலிதிக் மயானம்
      4.அஸ்தி கலசம் வைக்கப்பட்ட புதைகுழி மயானம்.ஆகியன அமைக்கப்பட்டது
அஸ்தி வைக்கப்பட்ட கல்லறை மயானம் மத்திய மாகாணத்தின் 
    தம்புள்ளைக்கு அண்மையில் அமைந்துள்ள - இப்பன்கட்டுவ
         யாப்பகூவாவிற்கு அண்மையில் அமைந்துள்ள - கல்சொஹன்
         கலேவெலைக்கு அண்மையில் அமைந்துள்ள - யட்டிகல்பொத்த 
போன்றன இடங்களில் காணப்படுகின்றது
அஸ்தி வைக்கப்பட்ட கல்லறை மயானம் (கி.மு.750 - 450) இடைப்பட்ட காலம் என விஞ்ஞான ரீதியாக கணிக்கப்பட்டுள்ளது.
மெகாலிதிக் மயானம் தொடர்பான ஆதரங்கள் இலங்கையில் கிடைக்கப்பெற்றுள்ளன அவ்வாறான இடங்களில் களிமண் பாத்திரங்களில் பாதுகாக்கப்பட்ட அஸ்தி குழி தோண்டிப் புதைக்கப்பட்டிருந்தது இவ்வாறான மயானம் அஸ்தி கலசம் வைக்கப்பட்ட புதைகுழி மயானம் எனும் பெயரால் அழைக்கப்பட்டது. 
முன்வரலாற்றின் காலத்திற்குரிய மயானங்கள்  ஊவா மாகாணத்தின்     
      ஹல்துமுல்ல
      பெரகல 
போன்ற பிரதேசஙூகளில்; காணப்படுகிறது. 
பச்சை களி மண்ணால் செய்யப்பட்ட களி மண் ஓடம் மயானம் உறுதி வாய்ந்ததாக காணப்படுகின்றது









குடியிருப்புக்களின் தன்மை
நிலையான வீடுகளை அமைத்து நிலையான வாழ்வூ வாழ்ந்தனர்
2009 இரத்தினபுரி உடரஞ்சாமடம எனப்படும் கிராமத்தில் 10.206.80 சதுர மீற்றர் கொண்ட வீடு அடையாளங் கண்டுபிடிக்கப்பட்டது.
கூரை இலுக்குப் புல்லால் வேயப்பட்டிருந்தது.
1129 இல் உடரஞ்சாமடம வீடு கண்டு பிடிக்கப்பட்டது.


வாழ்க்கை முறை
     வீடமைப்பு
முன் வரலாற்றுக்கால வாழ்க்கை முறையில் நிரந்தர வீடாக மண்வீடமைத்து இரும்புஇ உலோகம் மட்பாண்டம் பயன்படுத்தி அம்மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.
1129ல் அமைக்கப்பட்டதாக கூறப்படும் இரத்தினபுரி மாவட்டத்திற்குரிய கோலம்பகே ஆர எனும் பிரதேசத்தில் உடரஞ்சாமடம கிராமத்தில் அகழ்வூகள் மேற்கொள்ளப்பட்டது அங்கு மண் வீடு ஒன்றின் அத்திவாரம் கண்டு பிடிக்கப்பட்டது. இவ் வீடு 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்
சமயலறைகள் இருந்தமைக்கான சிதைவூகளும் உணவூக்காக 
       மான்
       மாடு
       காட்டுப்பன்றி
       மர அணில் போன்றவற்றை உண்டமைக்கான எழும்புகளும் கண்டு பிடிக்கப்பட்டது
  மட்பாண்டம்
மடக்கு என்று அழைக்கப்படும் நிறம் தீட்டப்பட்ட மட்பாண்ட துண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டது  ஆதிகாலம் தொட்டு வனைதல் தொழில்நுட்பம் இலங்கையில்  சிறந்து விளங்கியது என்பதற்கு இது ஓர் உதாரணமாகும்.
இம் மட்பாண்ட பிண்ணணியில் வெள்ளை நிறப்பிண்;;;ணணியில் சிவப்பு நிறக்கோடு சம இடைவெளியில் மட்பாண்ட அச்சு மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது
இவ் வடிவில் அமைந்த பாத்திரத்தின் சிதைவூ ஹல்துமுல்ல குடியிருப்பில் கண்டு பிடிக்கப்பட்டது
  
அலங்காரம் 
களி மணிகள் கண்டு பிடிக்கப்பட்டது 
பெண்கள் கண்மையிட உலோக குச்சுக்களை பயன்படுத்தியூள்ளனர்
உடம்பில் வர்ணம் புசுவதற்கு மஞ்சல் சிவப்பு  நிறத்திலான பூசு கற்களை பயன்படுத்தினார்கள்.  
இக்கால பெண்கள் தம்மை அலங்கரிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டினார்கள்.

                   தொழில்நுட்பம்
உலோகம் மற்றும் மட்பாண்டம் செய்யூம் தொழிநுட்டம் ஆரம்பமானது முன் வரலாற்று காலத்திலாகும்.
உலோக இரும்பை பயன்படுத்தியிருந்தனர்.
களி மண்ணிணால் ஆன மணிகள் இங்கு பயன்படுத்தப் பட்டிருந்தது. இதுவே முக்கிய தொழில்நுட்பமாகும்.
இரும்பு பலம் வாய்ந்த உலோகமாதலால் காடுகளை அழித்தல்இ நிலத்தை பயன்படுத்தல்இ உழுதல் போன்ற வேலைகளை மேற்கொள்ள பயன்பட்டது.



வரலாற்றுக்காலம்
இலங்கையில் எழுத்தாவணங்கள் கிடைக்கப் பெற்ற காலம் வரலாற்றுக்காலம் எனப்படும். இலக்கிய மூலாதாரங்களால் விபரிக்கப்படும் பண்டைய காலம் வரலாற்றுக்காலம் எனப்படுகின்றது.      
இலங்கையில் கி.மு 450 தொடக்கம் கி.பி 300 வரையிலான காலமே வரலாற்றுக் காலமாகக் கருதப்படுகிறதுவரலாற்றுக்கால குடியிருப்பின் பரம்பலில் பின்வரும் காரணிகள் செல்வாக்கு செலுத்தின.
1. வருடாந்த மழை வீழ்ச்சியின் அளவூ
2. மண்ணின் தன்மை
3. தரைத்தோற்ற வேறுபாடு
4. இயற்கை வளங்களின் பரம்பல்
5. நீரோடை என்பனவாகும்.முன்வரலாற்றுக் கால உலர்வலயம் மழைவீழ்ச்சி 1000 - 1250அஅ அளவில் கிடைக்கப் பெற்றது உலர்வலயம் என்று இதனை அழைத்தனர்.
1000 மில்லிமீற்றர் விட குறைவான பிரதேசம் அரைகுறை உலர்வலயம் என பெயரி;டப்பட்டது
உலர்வலயத்தில் குடியிருப்பு அமைந்ததற்கான காரணம் வளமான மண் காணப்பட்டமை ஆகும்.


            வரலாற்றுக்கால விவசாய பொருளாதாரம்
வரலாற்றுக் காலம் என்பதற்கான அடையாளமாக விவசாயம் காணப்படுகின்றது.
கி.மு. 01 நூற்றாண்டின் இறுதி அரை பகுதியில் அல்லது கி.பி 1ஆம் நூற்றாண்டிலே தான் அணைகட்டி குளம் அமைக்கும் முறை ஆரம்பித்தது. உதாரணம். திஸ்ஸ மகாராம குளத்தை இளநாக மன்னன் (கி.பி 33-43)இடைப்பட்ட காலத்தில் கிருந்தி ஒயாவூக்கு குறுக்கே குறுக்கே ஓர் அணைக்கட்டப்பட்டது.
குருநாகல் மாவட்டத்திலுள்ள கனேகந்த விகாரை கல்லெனவிகாரை
     ஆகியவற்றில் காணப்படும் பிராமிக் கல்வெட்டில் 'அவரன" என்ற சொல் 'அணைக்கட்டை"    குறிப்பதாகும்.

             வரலாற்றுக் கால குடியிருப்புக்களின் கட்டமைப்பு
வரலாற்றுக் கால குடியிருப்புக்கள் ஒர் குளத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சி அடைந்தது “வாபிகாம” என்று இலக்கிய மூலதாரம் குறிப்பிடப்படுவது குடியேற்றமாகும்
மகாவம்சத்தில் குறிப்பிடப்படும்.
சுமண வாபிகாம
விகாரவாபிகாம
ஹீந்தரி வாபிகாம 
கடஹா வாபிகாம
ஆகிய குளக்குடியேற்ற கிராமமாகும்.
சிரிய கிராமமொன்றின் பரப்பளவூ 0.15 ஹெக்டெயர் 
மத்திய அளவில் ஆனவை 2 ஹெக்டெயர்
மிகப் பெரிய நகரக் குடியிருப்பு 2 ஹெக்டெயரை விட கூடியது
பொதுவாக கிராமமொன்றில் 5 – 6 குடும்பங்கள் வாழ்ந்தன
பெரிய கிராமங்களில் 30 குடும்பங்கள் வாழ்ந்துள்ளன
கி.பி;.6ம் நுற்றாண்டாகும் போது மகாகம நகரில் 35000 குடும்பங்கள் வாழ்ந்தன







   வரலாற்றுக் கால மக்களும் தொழிலை அடிப்படையாக கொண்ட குடியிருப்புக்கள்
வரலாற்றுக் கால மக்கள் தமது குடியிருப்பை தேர்தெடுக்கும் போது தொழில் ரீதியாக தமது குடியிருப்பை தேர்தெடுத்தார்கள் என கல்வெட்டின் மூலமும் வம்சக்கதை மூலமும் அறிந்து கொள்ளலாம். அவ்வாறானவை சில பின்வருமாறு
கசீகார காம :- விவசாயிகள் வாழும் கிராமம்
மணிகார காம :- இரத்தினம் அகழ்வோர்இ பட்டை தீட்டுவோர் வாழ்ந்த கிராமம்
கோபால காம :- இடையர் வாழ்ந்த கிராமம்
கேவட்ட கமா :- மீனவர் வாழ்ந்த கிராமம்
கும்பகார காம :- குயவர் வாழ்ந்த கிராமம்
வட்டகீ காம :- தச்சர்; வாழ்ந்த கிராமம்
காரண காரிய அடிப்படையில் சில கிராமங்கள் வேறுபடுகின்ற அக் கிராமம்
பட்டான காம :- துறைமுகத்தை கொண்ட கிராமம்.
நியம் கம் :- வர்த்தக கிராமம் (சிறு நகரம்)
ஒலகம் :- மக்களால் கைவிடப்பட்ட குளக்கிராமம்
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் திஸ்ஸமகாராமையவின் கிருந்தி ஓயாப் பகுதியில் குடியிருப்புக்கள் பரம்பி காணப்பட்டன (கி.மு.900 – 500)
  
வரலாற்றுக்கால கிராம அமைப்பு முறை
வேலியிட்டு பாதுகாக்க பட்டிருந்த கிராமங்கள் 'பரிகித்தகம" எனும் பெயரால் அழைக்கப்பட்டு இருந்தது.
வேலியிட்டு பாதுகாத்து வைக்கப்படாத கிராமங்கள் 'அபரிகித்தகம" என்று அழைக்கப்பட்டது.
பெரிய நகர குடியேற்றங்கள் 'புரம்" என்னும் சொல் பயன்படுத்தப்பட்டது.
கி.மு 250ல் எழுதப்பட்ட பிராமிக் கல்வெட்டில் 'புரகமத்த" என்னும் பதவி நகரத்தின் பிரதான கட்டடக் கலைஞனை குறிப்பதாகும்.
1ஆம் விஜயபாகு மன்னன் (கி.பி.1055 -1110) பனாக்கடுவ செப்பு சாசனத்தில் அனுராதபுரம் “நுருபுரம்” என்னும் பெயரால் அழைக்கப்பட்டது.
கிராமத்தலைவன் 'குர்ஹபதி" என்ற பெயரால் அழைக்கப்பட்டது.
கிராமத் தலைவன் 'கமிக" அல்லது 'கிராமிக" என்ற பெயரால் அழைக்கப்பட்டன.
கிராமத் தலைவன் என்பதன் பொருள் 'கிராமிக" அல்லது 'கமிக" என அழைக்கப்பட்டது.
கி.பி 3ஆம் நூற்றாண்டை சேர்ந்த விஞ்ஞானி ஒருவரால் வீடு ஒன்று அடையாளம் காணப்பட்டது.  
10 கிராமங்களின் பிரதானிகள் தலைவர்கள் ஒன்று சேர்ந்து 10 பேர் கொண்ட சபையினை உருவாக்கியிருந்தனர்.
மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ள பிரதேசத்தில் களுதிய பொகுன விகாரை கல்வெட்டில் பிக்குகளுக்கு நிலதானம் வழங்குவதில் ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வூ காணுவதற்கு பல பிரதானிகள் ஒன்று கூடினர்.


நதிப்பள்ளத்தாக்கு

அதிகமாக மழை பெய்யூம் காலங்களில் நதியின் இருமருங்கிலும் வெள்ளம் ஏற்பட்டு வெள்ள நீரில் மூழ்கும் பிரதேசமே நதிப் பள்ளத் தாக்கு எனப்படும்.


கழிமுகம்
வெள்ள நீரில் கொண்டு வரப்படும் வளமான வண்டல்மண் பிரதேசமே கழிமுகம் எனப்படும். இவ்வாறான பகுதி டெல்றா எனப்படும் வரலாற்றுக் காலத்தில் நதிக்கரை பிரதேசங்களிலே 
விவசாயம் செழிப்புற்று  காணப்பட்டது.




13 comments:

சண்டிலிப்பாய் கிராமத்தில் அரிய தமிழ்க் கல்வெட்டு

சண்டிலிப்பாய் கிராமத்தில் அரிய தமிழ்க் கல்வெட்டு ********************************************** சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் நிர்வாகப் பி...