Monday 3 July 2017

வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் - 01

வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் - 01

1. ஒரு நாட்டின் அல்லது ஒரு பிரதேசத்தின் வரலாற்றை வெளிச்சம் இட்டு காட்டுவனவாக வரலாற்று மூலாதாரங்கள் அமைகிறது.
2. கட்டடம் ஒன்றை கட்டுவதற்கும் அத்திவாரம் எவ்வளவூ ஸ்திரமாக அமைய வேண்டுமே அது போன்று வரலாற்றைக் கட்டியொழுப்புவதற்கு வரலாற்று மூலாதாரங்கள் அடித்தளமாக அமைய வேண்டும்.
3. எழுத்தாவணங்கள் அல்லது ஆக்கங்கள் மூலம் முற்கால மனித செயற்பாடுகள் பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ள முடிவதனால் அவை மூலாதாரங்கள் எனப்படுகின்றன.

வரலாறு என்றால் ……………………….

கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையே நடைபெறும் முடிவற்ற பேச்சுவார்த்தையாகும்.
மனித சமுதாய வாழ்க்கையின் பதிவூக் குறிப்புக்களே வரலாறு ஆகும்.
மலர்ந்து விரிந்து வரும் மனித சுகந்திரத்தின் கதையாகும்.

         வரலாறு பற்றிய சில அறிஞர்களின் கருத்துக்கள்
பு.ஆ திரவிலியன் :- வரலாறு என்பது “பல அறிவூத் துறைகள் கூடி வாழும் இல்லம்” வரலாறு என்பது “தனித்த பொருளல்ல மாறாக எல்லாவித பொருள்கள் பற்;றிய இயல்புகளும் துறைகளும் வாழுகின்ற ஒரு மாளிகை” ஆகும்.
நு.H கார்; :- நிகழ்காலத்தை விளங்கிக்கொள்வதற்கான திறவூ கோலாக இறந்த காலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.  
 நு.H கார் :- வரலாற்றுப் பாடத்தைக் கற்க முன்னர் வரலாற்றாசிரியரை இனங்கண்டு கொள்ள வேண்டும்.
ஜவகர்லால் நேரு :- நிகழ்காலமும் எதிர்காலமும் நிச்சயமாக இறந்த காலத்திலிருந்தே கட்டியெழுப்பப்படுவதுடன் அதன் அடையாளங்களையூம் காண முடியூம். அதனை மறந்து செயற்படுவது அத்திவாரமின்றிக் கட்டமொன்றைக் கட்டுவதற்கு ஒப்பானதாகும்.
ஸ்ருவட் பிக்கொட் :- புராதன காலம் தொடக்கம் இன்றைய காலம் வரையில் மனிதகுலத்தின் கடந்த காலத்தைக் கற்பதுதான் வரலாறு ஆகும்.
பேர்க்ஹாட் :- வரலாறு என்பது ஒரு யூகத்தில் எழுதிப் பாதுகாத்து வைக்கும் அளவிற்கு பெறுமதிமிக்க விடயங்களை அதற்கு முன்னைய யூகம் ஒன்றிலிருந்து தேடிக்கண்டு பிடித்து கொள்வதாகும்.
ஹெரடோரஸ் :- ஆய்வூகளின் விளைவே பெறப்பட்டிருக்கும் தகவல்களை உள்ளடக்கியதே வரலாறு ஆகும்.
டையோனைசியஸ் :- வரலாறு என்பது உதாரயங்கள் மூலம் எடுத்து கூறப்படுகின்றது.
கிரேக்க அறிஞரான அரிஸ்டாட்டில்:- வரலாறு என்பது மறக்க முடியாத கடந்த கால நிகழ்வூகளின்;.             ஒரு குறிப்பாகும்.
பொலிபஸ் சிடைபஸ் :- ஞாபகத்தில் வைக்கக் கூடிய ஒரு பெறுமதியான நிகழ்வூகளின் ஒரு குறிப்பாகும்.
ரூசோ:- பல பொய்மளுக்கிடையில் மிகவூம் உண்மையை ஒததுள்ளதை தெரிவூ செய்யூம் கலையே   வரலாறு ஆகும்.
ஹேன்றி ஜோன்சன்: - வரலாற்றை பரந்த அடிப்படையில் பார்க்கும் போது எல்லாமே எப்பபோ       நடந்து      முடிந்த ஒன்று எப்படி இருந்தாலும் அது நடந்து முடிந்த ஒரு விடயமே.
பேராசிரியர் பின்ட்லேயிஸ்:- வரலாறு என்பது நிகழ்ச்சிகளின் விளைவூ தொடர்பானது



வரலாற்று மூலாதாரங்களை வகைப்படுத்தல்
வரலாற்று மூலதாரங்களை இரு வகைப்படுத்தி அறிந்து கொள்ள முடியூம்
i. இலக்கிய மூலாதாரம்
ii.தொல்பொருள் மூலாதாரம்
இறந்த காலத்தில் வாழ்நத மனிதன் பல்வேறு காலகட்டத்தில் எழுதி வைத்த நூல்களும் அறிக்கைகளும் இலக்கிய மூலாதாரங்கள் ஆகும்.

அகழ்வராட்சியின் போது கண்டெடுக்கப்படும் தொல்பொருட்கள்இசிலைகள்இநாணயங்கள்இ கல்வெட்டுக்கள்இசிதைவூகள் என்பன தொல்பொருள் மூலாதாரங்கள் ஆகும்.

          i இலக்கிய மூலாதாரங்கள்
இலங்கையின் வரலாற்றை அறியக்கூடிய இலக்கிய மூலாதாரங்களை இரு வகைப்படுத்தி நோக்கலாம்
        1.உள்நாட்டு இலக்கிய மூலாதாரம்
        2.வெளிநாட்டு இலக்கிய மூலாதாரம்
சுமார் இரண்டாயிரம் (2000) வருடங்களுக்கு முன்பிருந்து காலத்துக்கு காலம் எழுதிய கவிதைகள்இ உரைநடைகள்இ செய்யூள்கள் உள்நாட்டு இலக்கிய மூலாதாரம் ஆகும்.
இலங்கை பற்றிய கவனத்தினை ஈh;;த்தஇ வெளிநாட்டவர்களாலும் சில கதைகள் எழுதப்பட்டன. அவை வெளிநாட்டவர் இலக்கிய மூலாதாரம் எனப்பட்டன.

1. உள்நாட்டு இலக்கிய மூலாதாரம்
இலங்கையில் தோற்றம் பெற்ற மூலாதாரங்கள் உள்நாட்டு இலக்கிய மூலாதாரமாக காணப்படுகின்றது அந்த வகையில்
தீப வம்சம்
மகா வம்சம்
சூள வம்சம்
வம்சத்தப்பகாசினி (மகாவம்ச டீகாவ)
என்ற நூல்களும் இலங்கையின் வரலாற்றை அறிந்து கொள்ள உதவூம் உள்நாட்டு இலக்கிய மூலாதாரம் ஆகும். இதனை விட
அரசியல் தகவல்களை அடங்கிய நூல்கள்
பௌத்தசாசன வளர்ச்சி பற்றிய நூல்கள்.
தலைநகங்களை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்ற நூல்களும்
நீர்பாசன தொழி;நூட்பம் பற்றிய நூல்கள் இலங்கையில் வரலாற்றை எடுத்தியம்பியூள்ளன.

இலங்கையில் மகாவம்சம்இ தீபவம்சம் எழுதப்படுவதற்கு முன்ன்ர் காணப்பட்டஇ எழுதப்பட்டிருந்த
1. சிஹல அட்டகதா.
2. உத்தர விஹார அட்டகதா
3. வினய அட்டகதா
போன்ற நூல்களில் காணப்பட்ட விடயங்கள் தீபவம்சம் மகாவம்சம்; போன்ற நூல்களில் செல்வாக்கு செலுத்துக்கின்றது. இலக்கிய மூலாதாரங்களை பயன்படுத்தும் போது பின்வரும் விடயங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நூல் எழுதப்பட்ட காலம்
நூல் ஆசிரியர்
நூல் ஆசிரியரின் நோக்கம்
நூலுக்காக தகவல் திரட்டிய விதம்.

1. தீபவம்சம்.
இலங்கையின் புராதன பழமை வாய்ந்த நூல் தீபவம்சம் ஆகும்.
இந்நூல் கி.பி 4ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகும்.
தீபவம்சத்தில் சுருக்கமாக அரசியல் பௌத்த சமயப்பணிகள் கோரப்பட்டுள்ளன.
இலங்கையில் தோற்றம் பெற்ற முதலாவது பாளிநூல் இதுவாகும்.

2. மகாவம்சம்
இலங்கையில் தொடர்ச்சியான வரலாற்றை அறிந்து கொள்ள உதவூம் இலக்கியம் இதுவாகும்.
மகாவம்சத்தின் ஆசிரியர் மகாநாமதேரர் ஆவார். இவர் ‘திக்சந்த செனவியா பிரிவெனா’ வில் வாழ்ந்தவராவார்
கி.பி 5 ஆம் நூற்றாண்டில் அல்லது 6ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற நூலாகும்
புத்தர் பெருமான் வருகை முதல் மகாசேனன் வருகையிலான வரலாற்றை குறிப்பிடுகின்றது.
மகாவம்சத்தின் கதாநாயகன் துட்டகைமுனு ஆவான்.
மகாவம்சத்தில் காணப்படும் விடயம் கல்வெட்டில் காணப்படுவதன் மூலமும் வேறு ஆவாணங்களில் காணப்படுவதன் மூலமும் அதன் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ள முடியூம்
உதாரணம்:- மகாவம்சத்தில் துட்டகைமுனு பத்துத்தளபதிகள் பற்றி சிதுல்பவ்வாஇ சங்கமுவ விகாரை கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது.

3. சூளவம்சம்
மகாவம்சத்தின் 2ஆவது பாகம் என அழைக்கப்படுவது சூளவம்சம் ஆகும் மகாவம்சம் போல் தெடர்ச்சியான வரலாற்றை கூறுவதனால் இப்பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.
கி.பி 12ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றது. இதன் ஆசிரியர் தர்மகீர்த்தி தேரர் ஆவார்.
சூளவம்சத்தில் 12 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 15ஆம் நூற்றாண்டின் இறுதி வரையான வரலாறு காணப்பட்டுள்ளது.
சூளவம்சத்தில் 4 பாகங்கங்கள் காணப்படுகின்றது.
1ஆம் பாகம் - 1ம் பராக்கிரமபாகு (ஸ்ரீ மேகவண்ணன் - 1ம் பராக்கிரமபாகு)
2ஆம் பாகம் - 2ம் பராக்கிரமபாகு (2ம் பராக்கிரமபாகு - 4ம் புவனேகபாகு)
         3.ஆம் பாகம் - 6ம் பராக்கிரமபாகு (5ம் பராக்கிரமபாகு - ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன்)https://www.youtube.com/watch?v=PrLVhe9Fn1c&t=7s


4. வம்சத்தப்பகாசினி
பாளி நூல்களுக்கான விளக்கம் அளிக்கும் வகையில் டீகாவை என்னும் உரைநூல் எழுதப்பட்டது.
மகாவம்சம் எனும் பாளி நுhலுக்கு எழுதப்பட்ட விளக்கவூரை மகாவம்சடீகாவ ஆகும்
மகாவம்ச டீகாவ என்னும் இந்நூலுக்கு வம்சத்தபப்காசினி என்று பெயரிடப்பட்டது.
வேறு நூல்களில் காணப்படாத விடயங்கள் இந்நூலில் காணப்படுகின்றது.
கி.பி. 8ம் நுhற்றாண்டுக்கும் 11ம் நுhற்றாண்டுக்கும் இடையில் தோற்றம் பெற்றது








இலங்கையில் தலைநகரங்களை அடிப்படையாக கொண்டு தோற்றம் பெற்ற இலக்கியம்

  இ;லங்கை வரலாற்றை அனுராதபுர காலம் முதல் கண்டி இராசதானி காலம் வரையில் உள்நாட்டு இலக்கியங்கள் பல தலைநகரங்கள் அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றன.
இராஜரட்டைக்கால நுhல்கள்  - போதிவம்சம்இ தூபவம்சம்இ தாதுவம்சம்இ பூஜாவலி சத்தர்மாலங்கார முதலிய நூல்களும்
கம்பளை முதல் கோட்டை நுhல்கள் -  நிகாய சங்கிரஹயஇ ராஜாவலிய
கோட்டை முதல் கண்டி நுhல்கள் - தூதுஇலக்கியம்இ போர்க்காவியம்இ புகழ்காவியம்
     உதாரணம் - தூது இலக்கியம் - மயூ+ர சந்தேசய
                             திசர சந்தேசய
                             செலலிகினி சந்தேசய
               புகழ் இலக்கியம் - பெரகும்பா சிரித்த
               போர்க் இலக்கியம் -சிதாவாக்க சட்டன
                             இங்கிரிசி சட்டன
                             கொன்ஸ்தந்தினு சட்டன.

அனுராதபுர காலம் -    தம்பிய அட்டுவா கற்றபதய
               ஹெரணசிக
               சிகவலந்த வினிச    
               சியபஸ்லகர

பொலன்னறுவைக் காலம் -முவதெவ்தாவத
                          சசந்தாவத
                          தர்மபிரதீபாகவ
                          ரசவாஹினிய

தம்பதெனியாக் காலம் -  சத்தர்ம ரத்தினாவலிய
                          பூஜாவலிய

குருணாகல் காலம் -    ஜாதகக்கதை நூல்
                         சிங்களப் போதி வம்சம்
                         நிகாய சங்கிரஹய

கோட்டைக் காலம் -    தூது இலக்கியம்
                         போர்க்காவியம்
                         புகழ் காவியம்
                         குத்திக்கல காவியம்

இலங்கையில் தோற்றம் பெற்ற போர்இ தூதுப்பிரபந்தம்இ வரலாறு ஆகிய இலக்கியங்களை பின்வருமாறு அழைப்பார்.
                போர் -சட்டன
                தூதுப்பிரபந்தம் -சந்தேசய
                சிரித்த –வரலாறுஃபுகழ்
https://www.youtube.com/watch?v=sjYQ7bhS5QQ




பௌத்தசமயம் சார்ந்த நூல்கள்
       தடாவம்சம்இ போதிவம்சம்இ தூபவம்சம்இ தாதுவம்சம்இ பூஜாவலியஇ பத்தர் லங்காரஇ சிகாய சங்கிரஹய போன்ற நூல்கள் பௌத்தசமயம் சார்பான வரலாற்றை குறிப்பிடுகின்றன.
தடாவம்சம் - தந்ததாது பற்றிய வரலாற்றினை கூறும் பாளி நூலாகும்.
நிகாய சங்கிரஹய – புத்தசாசன வளர்ச்சி பற்றிக்குறிப்பியல்
        இந்நுhலாசிரியர் ஜெயபாகு விக்கிரம தேவரக்கிகர்
சமந்த பாசதீகாவ - இது வினயகபீடகம் எனும் பாளி நூலுக்கான விளக்கநுhல் ஆகும் இலங்கையில் பௌத்தசமயம் வருகை தந்தமை பற்றியதுமான வரலாற்றைக் குறிப்பிடுகிறது. இந்நுhலாசிரியர் புத்தகோசர்
சத்தர்லங்கார - கோட்டைக்கால வரலாற்றை அறிய உதவூகக்கின்றது.
               இந்நுhலாசிரியர் விமலகீர்த்திதேரா;
சத்தர்மாத்தினாவலிய - தம்ப தெனியாக் காலத்தில் தோற்றம் பெற்றது.
                இந்நுhலாசிரியர்- தர்ம சேனர்
பூஜாவலிய – கோட்டைக்கால வரலாற்றை அறிந்து கொள்ள உதவூகின்றது.
                இந்நுhலாசிரியர் மயூ+ரபாத தேரா;
புதுகுணலங்கார – வீதாகம மைத்திரிய தேரா;

2. வெளிநாட்டு இலக்கிய மூலாதாரம்
       அனுராதபுரத்தின் ஆரம்பம் தொடக்கம் இலங்கை வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தது. அந்த வகையில் இலங்கை பற்றிய வெளிநாட்டு மூலாதாரங்கள் தோற்றம் பெற்றன.
இலங்கைக்கு வருகை தந்தும்
இலங்கைக்கு வருகை தராமலும்
இலங்கைப் பற்றி வெளிநாட்டு எழுத்தாளர்களால் எழுத்தாவனம் தோற்றம் பெற்றது.
இலங்கைக்கு வருகை தந்து நேரடி அனுபவங்களை பெற்று இலக்கியங்களை எழுதியூள்ள எழுத்தாளர்கள் பின்வருமாறு
சீன இலக்கியம்            - பாகியன் தேராpன் தேச சஞ்சாரி அறிக்கை
                               ( பௌத்த இராச்சியம் பற்றிய விபரம்)
அரபு இலக்கியம்           - இபன்பதுதாசன் தேச சஞ்சாரி அறிக்கை
போர்த்துக்கேய இலக்கியம்    - ரிபைரோ என்பவரின் இலங்கை பற்றிய நூல்
                                (ரிபைரோவின் இலங்கை வரலாறு)
ஓல்லாந்து இலக்கியம்       - பிலிப்ஸ் பல்டியஸ் என்பவரின் இலங்கை பற்றிய
                               நூல் (பொல்டியரின் இலங்கை வரலாறு)            
ஆங்கில இலக்கியம்       - ரொபட் நொக்ஸ் அவர்களின் இலங்கை பற்றிய நூல்
                                 (அன்றைய இலங்கை)
இலங்கைக்கு வருகை தராது இலங்கைக்கு வருகை தந்தவரிடம் கேட்டறிந்து இலங்கை பற்றி எழுதிய எழுத்துக்களும் அவர்களது நூல்களும் பின்வருமாறு
     கிரேக்க மூலாதாரங்கள்   - அரிஸ்டோட்டிலின் -- டிமுன்டோ
                          ஒனெசி கிரிட்டசின் அறிக்கை  
                          மெகஸ்தனிசின் - இண்டிக்கா
     உரோம மூலாதாரங்கள்   - பிளினியின் - நெஞ்சுரலிஸ் ஹிஸ்டோரியா
                          தொலமியின் - பூக்கோள சாஸ்திரப் பிரவேசம்
                          தொலமியின் இலங்கைப்படம்
     சீன மூலாதாரங்கள்      -  ஹியூங்சாங் பிக்குவின் தேச சஞ்சாரி அறிக்கை
     போர்த்துக்கேய மூலாதாரங்கள் - அருட்தந்தை பா;னாவோ குவெரோஸ்
                            இலங்கை பற்றிய அறிக்கை
தென்னிந்தியாவில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம்இமணிமேகலைஇபத்துப்பாட்டு ஆகியவற்றில் இலங்கை பற்றி எழுதப்பட்டுள்ளது

மேலதிக வெளிநாட்டு மூலாதாரமும் அதன் ஆசிரியர்களும் அவர்களால் கூறப்பட்ட கருத்துக்களும்

இராஜ தரங்கனி         கல்கனர்         இலங்கையின் நீர்பாசன பொறி முறை
பெரிப்லஸ் ஒப் எரித்திரியன்       பொpப்லஸ் மாரிஸ்   இலங்கையில் முத்துஇ மாணிக்கம்இ பருத்தித்துணி போன்ற வர்த்தகப் பொருட்கள் இருந்ததாக கூறப்படுகின்றது.
பாரசீக யூத்தம் புரொகோடியபல் இலங்கை வர்த்தக மத்திய நிலையமாக திகழ்ந்தாக கூறப்படுகின்றது.
டெபோ கிறபியா கிறிஸ்டியபனா  
கொஸ்மஸ் இலங்கை வர்த்தக மத்திய        நிலையமாக திகழ்ந்தாக கூறப்படுகின்றது.
சில் சிலாத் அல்தவாரிங்         ஆபூசைத் இலங்கை பற்றிய விபரம்
அர்த்த சாஸ்திரம்       கெயடில்லியர் இலங்கை தாமிர பரணிஇ பராசமுத்திரம் எனும் பெயர்களால் இலங்கை கூறப்படுகிறது

      இலங்கை வரலாறு பற்றிய கருத்துக்களை வெளியிட்ட வெளிநாட்டு இலக்கிய எழுத்தாளா;
பாஹியன் தேரா; - சீனாவை சோ;ந்த புத்த பிக்கு இவராவா;.
           இலங்கைக்கு (கி.பி - (399-414) வருகை தந்து அனுராதபுரத்தின் அபயகிரி விகாரையில் தரித்து நின்றார்
           சீனாவின் வன் -சீ என்னும் பிரதேசத்தில் பிறந்தார்
           இவரது பயணக்குறிப்பேடுகளில் அக்கால இலங்கை வரலாறு காணப்படுகின்றது.
           கி.பி.411 இல் இலங்கைக்கு வருகை தந்ததாக சில குறிப்புக்கள் கூறுகின்றன.

ஹியூங்சாங் - சீனாவைச் சோ;ந்த பௌத்த பிக்கு இவராவார்.
           (கி;பி 602-664)ஆசியாவில் தான் கண்டவற்றை தனது அறிக்கையில் எழுயிருந்தாh;.
        இலங்கைக்கு வருகை தாராமல் இந்தியாவில் தனித்து நின்று இலங்கை பற்றிய   வரலாற்றை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
           இவரது அறிக்கை மூலம் 7ம் நூற்றாண்டு பற்றிய வரலாற்றை அறிய முடிகின்றது.

 ஜோவாவோ ரிபைரோ - போத்துக்கல் நாட்டைச் சாந்தவர்.
        இவர் 1640 மார்ச் மாதம் போத்துக்கேய இராணுவ வீரனாக இலங்கைக்க வந்தார்.
        18 ஆண்டுகள் இராணுவத்தில் கடமை யாற்றி கற்பித்தான் பதவி உயர்வூ பெற்றார்.
        17ம் நூற்றாண்டில் இலங்கை பற்றி அறிவதற்கு இந்நூல் உதவூகின்றது.
        போர்த்துக்கல்லின் தலைநகரான  லஸ்பனில் வாழ்ந்தார்.
        இவர் எழுதிய நூல் இலங்கையின் கழகம் ஆகும்.

பிலிப்பஸ் பொல்தெவூஸ் - இவர் ஒல்லாந்து கல்வினிஸ்த மதகுருவாவார்.
        (கி.பி 1632-1672)இவர் ஒல்லாந்து படையூடன் இலங்கை வந்தார்.
        டச்சு கிழக்கிந்திய வர்த்தக கம்பனியின் சேவையாற்றினார்.
அவர் அன்றைய இலங்கையின் சமூக வாழ்க்கைஇ மொழியூம் கலாசாரமும் பற்றிய    குறிப்புக்களை எழுதினார்.

றௌபட் நொக்ஸ் - (கி.பி 1641-1720) ஆங்கிலோயான இவர் தனது 14ம் வயதில் இந்தியாவிற்கு    வருகை தந்தார்.
      கி.பி 1658 பாரசீகம் நோக்கி பயணித்தார் இலங்கையினை வந்தடைந்தார்.
      கண்டி மன்னனான 2ம் இராஜசிங்கன் இவர்களை சிறைப்படுத்தல்.
      மன்னார் அரிப்பு என்ற இடத்தில் வாழ்ந்தார.;
      1680 இங்கிலாந்தை நோக்கி வருகை தாந்தார்.
               யூn hளைவழசiஉயட சநடயவழைn ழக வாந ளைடயனெ உநலடழn என்றும் நூலை1681 எழுதுதல்
     அன்றைய இலங்கைத்தீவூஇ இலங்கைச்சரித்திரம்இ வரலாற்றுத்தொடர் எனும் நுhல்களை  எழுதுதல்

பர்னாவே டி குவாரோஸ் - இயேசு சபையின் சமய போதகராவர்.
      இவர் போத்துக்கேய இனத்தவராவார். 1688 ஆண்டு இவர் இலங்கை பற்றி
      வூநஅpழசயட யனெ ளிசைவைரயட உழஙூரநளவ ழக  உநலடழn என்னும் நூலை எழுதினார்.
       இந்தியாவில் இருந்து இலங்கை பற்றி எழுதுதல்.


                  ஐi  தொல்பொருள் மூலாதாரங்கள்
இலங்கையில் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு தொல்பொருள் மூலதாரங்கள் அடிப்படையாக அமைந்து கொண்டன.
தொல்பொருள் மூலாதாரங்களை எழுத்தாவணம்இ நாணயங்கள்இ சிதைவூகள்இ சித்திரங்கள்இ சிற்பங்கள்இ செதுக்கல்கள் என வகைப்படுத்தலாம்.

         சாசனங்கள்
சாசனம் என்றால் கருங்கல்இ களிமண்தட்டு இ சுவர்இ செப்புத்தசடுஇ பொன்தகடுஇ மரப்பலகைஇ என்பவற்றில் எழுதிப்பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஆவணம் சாசனம் எனப்படும்.

எழுத்தாவணம் எழுதப்பட்ட சாசனமும் அவற்றிக்கான உதாரணமும்
   கல்வெட்டு   -  நிஸ்ஸங்க மல்ல மன்னனின் கல்பொத்தா சாசனம்
   சுவர்       -  சீகிரியா கிறுக்கல் கவிதைகள்
   பொன் தகடு  -  வசப மன்னனின் வல்லிபுர பொற்சாசனம்.
   மரப்பலகை  -  கம்பளை எம்பக்க தேவாலய மரத்தூண்களில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள்.
   களிமண் பொருள்கள் - செங்கள்இ ஓடு என்பவற்றில் எழுதப்பட்டுள்ள  எழுத்துக்கள்.
   பாத்திரம் -     மட்பாண்டம்இ உலோகப் பாத்திரத்தில் எழுதப்பட்டுள்ள  எழுத்தாவனம்.
   செப்புத் தகடு - முதலாம் விஜயபாகு மன்னனால் சித்தாறும்பு புத்தநாயக எனும் அதிகாரிக்கு         வழங்கிய சலுகை மற்றும் பதவிகள் பற்றி பனாகடுவ செப்பு சாசனம் குறிப்பிடுகின்றது.

     கல் வெட்டு
கருங்கல்லில் எழுதி வைக்கப்பட்டுள்ள ஆவணம் கல்வெட்டு எனப்படும். இலங்கையில்   காணப்படும் கல்வெட்டுக்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்
குகை கல்வெட்டு
குன்று கல்வெட்டு
தூண் கல்வெட்டு
சுவர் கல்வெட்டு
இருக்கை கல்வெட்டு
இலங்கையின் புராதன கல்வெட்டு பிராமி எழுத்தில் காணப்பட்டது
கி.பி 2ம் நுhற்றாண்டு முதல் கண்டி இராச்சியம் வரை கல்வெட்டு தோற்றம் பெறல்
இலங்கையின் ஆரம்ப காலத்து கல்வெட்டுக்கள பௌத்த பிக்குகளுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு பற்றியூம் புராதன சமூக வரலாறுஇ குடியேற்றங்களின் பரம்பல்இ அன்பளிப்புக்களை வழங்கியவர்களின் பதவிஇ பரம்பரை என்பன இக் கல்வெட்டுகளில் கூறப்பட்டிருந்தன.
இலங்கையில் தோற்றம் பெற்ற இலங்கையின் மிக நீளமான கல்வெட்டு நிஸங்க மல்ல மன்னனின் கல்பொத்தா கல்வெட்டு ஆகும்.
இலங்கையில் தமிழ்இ சிங்களம் ஆகிய இரு மொழி கல்வெட்டு காணப்படும் இடம் கடலாதெனியா
இலங்கையில் தமிழ் பாரசீகம் சீனம் ஆகிய மும்மொழிக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும் துறைமுகம் காலி
இலக்கியங்களின் உரைகல் என அழைக்கப்படுவது கல்வெட்டுக்கள்

கல்வெட்டுக்கள் எழுதப்பட்டுள்ள கருங்கல்லில் அமைப்புக்கு ஏற்ப கல்வெட்டுக்களை வகைப்படுத்தலாம்.
குகை கல்வெட்டு  -  கற்பீலிகளின் அருகில் எழுதப்பட்டவை.
குன்று கல்வெட்டு - கற்பாறைகளின் மேல் எழுதப்பட்டவை.
தூண் கல்வெட்டு -   செப்பனிடப்பட்ட கருங்கல் தூண்களில் எழுதப்பட்டவை.
சுவர் கல்வெட்டு -  செப்பனிடப்பட்ட கற்பலகையில் எழுதப்பட்டவை.
இருக்கைக் கல்வெட்டு- மலர் ஆசனங்கள் போன்றன பீடங்களில் எழுதப்பட்டவை.

 மேலதிக கல் வெட்டுக்களும் அவை குறிப்பிடும் விடயங்களும்
சிதுல் பவ்வ சங்கபால         துட்டகைமுனு மன்னனின் 10 படைத்தளபதிகள் பற்றியது
மிகிந்தலை சுவர்க் கல்வெட்டு
களுதிய பொகுண
அபயகிரி சமஸ்கிரதக் கல்வெட்டு ஆராமை நிர்வாகம் பற்றியது

கதுறு வெவக் கல்வெட்டு       ஜந்து அமைச்சர்களின் பரம்பரை பற்றிக் கூறியது.
கொடவாயத்தூண் கல்வெட்டு     துறைமுகவரி அறவிட்டமை பற்றியது
பதுளைத்தூண் கல்வெட்டு       வர்த்தக சந்தை ஒன்றின் நிர்வாகம் பற்றியது.
சிதுல் பவ்வ  கல்வெட்டு       நீதி மன்றத்தின் மூலம் பெறப்படும் வருமானம் அப்பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரைக்குரியது எனக் கூறுகிறது
பெரிமியன் குளக் கல்வெட்டு வர்த்தக தரங்கள் மற்றும் கைத்தொழில் பற்றியது
குசேலன் கந்த
யடஹலென
பம்பரகல
ஹென்னன்னோல குறு நில மன்னர்கள் பிரதேச ஆட்சியாளன் பற்றியது
   






                 நாணயம்
இலங்கைளில் காணப்படுகின்ற தொல்பொருட்கள் நாணயம் ஊடாக நாட்டின் பொருளாதார நிலைஇ வர்த்தகம்இ உலோகப் பாவனைஇ தொழிநுட்ப அறிவூ என்பவற்றை அறியலாம்.
புராதன நாணயம்  “கஹபனஇ புரானஇ தரணஇ” என்றும் பெயர்களால் அழைக்கப்பட்டது.
பொன் நாணயம் “அக நாணயம்” என அழைக்கப்பட்டது.
பொலன்னறுவைக் காலத்தில் “தம்பமஸ்ஸ” என்னும் செப்பு நாணயம் பயன்படுத்தப்பட்டது.
மத்திய கால தங்க நாணயம் (கஹவனு) எனும் பெயரால் அழைக்கப்படுதல்.
இலங்கையில் சீன உரோம இந்திய நாணயம் கிடைக்கப் பெறல்
யானை மற்றும் சுவஸ்திகா மற்றும் இலக்சுமி உருவம் பொறித்த நாணயம் காணப்படல்
புராதன நாணயங்கள் பற்றி ஆய்வூ செய்யூம் பாடம் நாணய விஞ்ஞானம் எனப்பட்டது.
               புராதன சிதைவூகள்
இலங்கையின் பழைய கட்டடங்கள்இ விகாரைகள் கற்நூண்கள்இ குளங்கள்இ பொய்கை என்பவற்றின் இடிபாடுகள்இ சிதைவூகள் ஆகும்.
சிதைவூகள் ஊடாக முற்கால மக்களின் கலையாற்றல்இ தொழிநுட்ப அறிவூஇ சுற்றாடல் பாதுகாப்புஇ நீர்முகாமைத்துவம் பற்றி சிதைவூகள் ஊடாக அறியலாம்.

சித்திரங்கள்இ செதுக்கல்கள்இ தொல்பொருட்கள்
புரான சித்திரங்கள்இ சிற்பங்கள் இ சிலைகள்இ செதுக்கல் கலைகள் என்பன வரலாற்றை உயிரோட்டமாக காட்டும் வரலாற்று மூலாதாரம் ஆகும்.
சீகிரிய ஒவியத்தில் பெண்களின் ஆடையணிகள்இ கலையாற்றல்கள்இ பயன்படுத்திய ஆபரணங்கள்இ சமய நம்பிக்;கைகள்இ பெண்களின் ஆடைஇ கூந்தல் அலங்காரம்இ அரங்கார கலைநுhட்பங்கள் என்பன வெளிப்பட்டு நிற்கின்றன
பண்டைய மக்களின் பல்வேறுபட்ட திறமைகள்இ ஆற்றல்கள்இ பண்டைய கலாச்சாரம்இ தொழில்நுட்பம்இ வாழ்க்கைமுறைஇ வெளிநாட்டு தொடர்புகள் என்பவற்றை சித்திரங்கள்இ செதுக்கல்கள்இ தொல்பொருட்கள் என்பனவற்றின் மூலம் அறியலாம்.
அனுராதபுரத்தின் இசுறுமுனிய விகாரையில் செதுக்கப்பட்டுள்ள குதிரைத்தலையூம் மனிதனும் இது கி.பி 7ம் அல்லது 8ம் நூற்றாண்டுக்குறிய மிக முக்கியான சிற்பமாகும்.
குதிரைத் தலை – அக்கினித் தெய்வத்தையூம்
மனித உருவம் - பர்ஜன் தெய்வத்தையூம் குறித்து நிற்கின்றன


இலக்கிய மூலாதாரங்களின் பயன்கள்
வரலாற்றுக் கால ஒழுற்கு முறையை வளர்த்துக்கொள்ள முடியூம்
பல்வேறு காலகட்டங்களின் அரசியல்இ பொருளாதாரஇ சமூகஇ கலாசார நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்வதற்கு
ஒரு நுhலில் கூறப்பட்ட தகவல் இன்னொரு நுhலின் மூலம் உறுதிப்படுத்த உதவூம்
ஒரு நாட்டின் வெளிநாட்டு எறவூகள் பற்றி அறிந்து கொள்ள உதவூம்


வரலாற்றை கற்பதன் முக்கியத்துவம்
தாம் வாழும் சமூகம் மற்றும் உலகம் பற்றிய புரிந்துணi;வைப் பெறுதல்
இறந்த கால அனுபவங்களின் மூலம் நிகழ்காலத்தைப் புரிந்து எதிர்காலத்தை சிறப்பாக்குதல்.
நாட்டின் தேசிய தனித்துவத்தை அறிந்து கொள்ளுதல்.
மனிதத் தன்மையை மதிப்பதன் மூலம் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துதல்.
மாற்று கலாச்சாரத்தை மதித்தல்.
வேறுபட்ட கருத்துக்களையூம் சகித்துக் கொள்ளுதல்
தொல்பொருள் மூலாதாரங்களை பாதுகாத்தல்
தொல்பொருள் மூலாதாரங்களை பாதுகாத்தல் நாட்டு மக்களின் கடமையாகும்.
நீண்ட காலம் நிலைத்திருக்க கூடிய தொல்பொருள்களாக கருங்கல்இஉலோகம்இ களிமண் காணப்படுகின்றது
பாரிய நிர்மாணங்களாக குளம்இ கால்வாய் என்பன காணப்படுகின்றது
சூரிய இ சந்திர உருவங்கள்இ விசிறிஇ வில்இ அம்புஇ மாட்டுக்கொம்பு. பாதச்சுவடு இ விலங்குருவங்கள் என்பன புராதன எல்லைகளை குறிப்படும் அடையாளம் ஆகும். ஆடையாள சின்னங்களை  சந்திர வட்டக்கல் காவற்கல் கற்தூண்கள் காணப்படும் இடங்கள் பொருளாதார ரீதியில் பெறுமதியான பொருட்கள் புதைத்திருக்கலாம் என்ற தவறான கருத்து காணப்படுகின்றன.
தொல்பொருள் மூலாதாரங்கள் அழிக்கப்படும் சந்தர்ப்பங்கள்
      நாடு வேகமாக வளர்ச்சி அடைதல்
      குடியேற்றங்களின் பரம்பல்
      பெருந்தெருக்கள் அமைக்கப்படுதல்
      கட்டடங்கள் கட்டுதல்
      விவசாய நடவடிக்கை என்பனவற்றின் மூலம் ஆகும்.


ஊசாத்துணை நூல்கள்
 1. பவூண்துரை.இஇ 2001இ “அருங்காட்சியகவியல்”இ பெய்யப்பன் தமிழ் தாயகம்
2. சில்வாஇ P.ளு.னு.H.வூஇ 1969 “இலங்கை கல்வி நூற்றாண்டு மலர்”இ பாகம் 3இ இலங்கை கல்வி கலாச்சார அமைச்சின் வெளியீடு
4கிருஸ்ணராஜா.செ .2012 இலங்கை பண்பாட்டு பரிணாமத்தின் அடிப்படைகள்  பசநயளழைn பதிப்பகம் யாழ்ப்பாணம்


1   5Martin queen mi, 1995, “ Christanity in Srilanka under the Portuguese pad road”, Colombo catholic press, page no:- 1597-1658

6 comments:

  1. Thanks for your valuable notes

    ReplyDelete
  2. Thank you for your information

    ReplyDelete
  3. தேவையான தகவல்களை தொகுத்துள்ளீர்கள்.. மிக்க நன்றி🙏🙏

    ReplyDelete

சண்டிலிப்பாய் கிராமத்தில் அரிய தமிழ்க் கல்வெட்டு

சண்டிலிப்பாய் கிராமத்தில் அரிய தமிழ்க் கல்வெட்டு ********************************************** சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் நிர்வாகப் பி...