Tuesday, 4 July 2017

             
   

                                       பன்ன வேலை
இது பனையோலை குறிப்பாகக் குருத்தோலை, நார், ஈர்க்கு, மட்டை என்பவற்றைக் கொண்டு வீட்டுக்குத் தேவையான பாவனைப் பொருட்களான பெட்டி, கடகம், சுளகு, பாய், நீற்றுப்பெட்டி, தடுக்கு, குட்டான்,  தொன்னை, வட்டில், விசிறி, தொப்பி, கிலிகிலுப்பை என்பவற்றை இழைப்பதாகும். ஈழத்தில் அன்றைய பெண்கள் பங்கேற்கும் முக்கிய குடிசைக் கைத்தொழில்.

நவீனத்துவம் தாக்காத காலத்தில் பலதரப்பட்ட தேவைகளுக்கும் பன்ன உற்பத்தி பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது அனைத்துத் தேவைகளும் நவீனத்துவப்படுத்தப்பட்டதால்இ இன்று ஆக்கபூர்வமான மற்றும் அழகியல் அலங்காரம் சார்ந்த பொருட்களே பெரிதும் உற்பத்தி செய்ய படுகின்றன.

வடக்கில் மன்னார் மாவட்டத்தில்இ பனை அபிவிருத்தி சபையின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட கைவினைஞர்களால் பன்ன வேலை தொடர்பான விழிப்புணர்வும்இ பயிற்சி வகுப்புகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலமாக பன்ன வேலையானது அழகியல் சார்ந்து வளர்ச்சியடைந்து வருகின்றது.வெட்டி எடுக்கப்பட்ட ஓலைகள் நீரில் பதப்படுத்தப்பட்டுஇ இழப்பதற்கு ஏற்றவாறு தேவையான அளவுகளில் வெட்டி எடுக்கப்படுகின்றன. பொருத்தமான அளவுகளில் வெட்டி எடுக்கப்பட்ட ஓலைகள்இ பின்னர் சாயம் போடப்படும்.
 நிறைவு செய்யப்பட்ட கைவினை பொருள் ஒன்று. இவ்வாறான ஒரு பொருள் செய்யஇ இரண்டு நாட்களில் 7 மணித்தியாலங்கள் பிடிக்கும்.

                       இழைக்கப்படும் தொப்பி ஒன்று.

     
                                        இழைக்கப்பட்ட தொப்பிகள்.


   
 அன்றாட வாழ்விற்கு தேவையான கைவினை பொருட்கள்.

பாய்கள்:- படுக்க உபயோகிக்கும் 5’ஒ7′ பாய்கள்இ சூடடிக்கப் பாவிக்கும்இ பந்தலுக்கு விரிக்கும் 20’ஒ 25′ களப்பாய்கள்இ பந்திக்கு விரிக்கும் 2’ஒ30′பந்திப்பாய்இ பிற்கூறிய இரண்டும் முற்றாகப் பாவனையற்று விட்டது. முற்றலோலையில் பனாட்டுப் போட பனாட்டுப் பாயுமுண்டு. ஒரு தடவையே பாவிப்பர்.




                         

நீற்றுப்பெட்டி:-பனையோலைஇஈர்க்குக் கொண்டிழைக்கப்படும் கூம்புவடிவுடையது;இதை உணவுப்பண்டங்களை அவிக்கஇ திரவப் பதார்த்தங்களை வடிக்க உபயோகிப்பர்.


சுளகு:- பனையீர்க்காலும்இ மட்டையாலும் பின்னுவது. அரைச் செவ்வக வடிவில் புடைப்பதற்கும்இ வட்டவடிவில் உணவுப்பொருட்களைக் காயவைப்பதற்கும் பல அளவுகளில் முடைவார்கள்.

                 
கடகம்:- பனையோலை நார் கொண்டிழைப்பதுஇ சாதாரண பனையோலைப் பெட்டிக்கும் கடகத்துக்கும் உள்ள வித்தியாசம் கடகத்துக்கு வெளிப்பாகம் நாரால் இழைத்து வாய்ப்பகுதிக்கு பலத்திற்காக தடிப்பான நார் பொருத்தியிருப்பார்கள். பாவனையிலும் கடகத்தின் உபயோகத்துக்கு சாதாரண பெட்டியைப் பாவித்தால் பிய்ந்து விடும். உ+ம்- மண்இ கல் அள்ளுதல். சும்மாடு என்பது பாரமான பொருட்களைத் தலையில் காவும் போது அழுத்தாமல் மென்மையாக இருக்க பழைய துணிஇ சால்வைஇ முந்தானைச் சேலை போன்றவற்றால் உடன் செய்வது. அதாவது வட்டவடிவமாக ஒரு சாண் விட்ட அளவில் சுருட்டுவது. இதை துணிவகையிலேயே செய்வர். தலைக்கு மெத்தென இருப்பதே நோக்கமும் தேவையும்.https://www.youtube.com/watch?v=mTiJtZyuWAo


                                   
அடுக்குப் பெட்டி:- இன்றைய அடுக்கு அலுமினியம்இ எவர் சில்வர்ச் சட்டிகள் போல்இ அன்று அடுக்குப் பெட்டிகள் 1ஃ2′ முதல் 1 1ஃ2′ விட்டம் வரை சுமார் 1ஃ2′ உயரத்தில் ஒன்றினுள் ஒன்று வைக்கக் கூடியதாக இழைக்கப்பட்டவை. ஒரு அடுக்கில் 5 முதல் 10 பெட்டிகள் இருக்கும்…பலவித தேவைகளுக்கும் அவற்றின் அளவுக்கேற்ப பயன்படுத்துவர். நல்ல இளங்குருத்தோலையில் இழைத்தவை அதிகம் நனையவிடாமலோஇ அல்லது காயவிடாமலோ நிழலில் பாவித்தால் 15 வருடங்கள் கூடப் பிய்யாமல் இருப்பவையும் உண்டு.
https://www.youtube.com/watch?v=jLkj73F4fP8

                   
                     
பொருட்களை கொள்வனவு செய்ய அன்றாடம் பயன்படுத்த கூடிய கூடை.

அலங்காரங்களுடன் கூடிய கை பைகள் மற்றும் கூடைகள்.




   



பன்ன வேலையினாலான அலங்கார பொருட்கள்.
   



   




         
பன்ன வேலை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட கைவினை பொருளொன்றுஇ நவநாகரீக துறையில் பயன்படுத்தப்படுவதை காணலாம்.

இப் பன்ன வேலையானதுஇ மக்களூடாக கடத்தப்பட்டுஇ கைவினை கலைஞர்களூடாக வாழ்ந்துகொண்டிருக்கின்றது. இது பல இடங்களில் சிறு கைத்தொழிலாக மக்களின் வாழ்வாதாரமாக காணப்படுகிறது. இதை ஊக்குவிக்கும் வகையில் பெருமளவிலான எந்தவொரு நிதி சம்மந்தமான நடவடிக்கைகளும் அரசினால் மேற்கொள்ளப்படுவது அரிது என்பது கவலைக்குரியது.

ஊசாத்துணை நூல்கள்
1. பவூண்துரை.இஇ 2001இ “அருங்காட்சியகவியல்”இ பெய்யப்பன் தமிழ் தாயகம்
2. சில்வாஇ P.ளு.னு.H.வூஇ 1969 “இலங்கை கல்வி நூற்றாண்டு மலர்”இ பாகம் 3இ இலங்கை கல்வி கலாச்சார அமைச்சின் வெளியீடு



No comments:

Post a Comment

சண்டிலிப்பாய் கிராமத்தில் அரிய தமிழ்க் கல்வெட்டு

சண்டிலிப்பாய் கிராமத்தில் அரிய தமிழ்க் கல்வெட்டு ********************************************** சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் நிர்வாகப் பி...