எழுதிய 1.இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு, 2.ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள் எனும் இரு நூல்கள் 18.01.2018 (வியாழக்கிழமை) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் பிற்பகல் 3 மணிக்கு வெளியீடப்படவுள்ளது இந் நிலையில் இந் நூல் பற்றி அவர் கூறியதாவது இலங்கைத் தமிழர் வரலாறு ஆனது மூடி மறைக்கப்பட்ட வண்ணமே காணப்பட்டது
ஆனால் அண்மைக் கால தொல்லியல் ஆய்வுகள் இருள் சூழ்ந்திருந்த ஈழத்தமிழர் வரலாற்றை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது அதேவேளையில்
ஈழம் சுகந்திரமடைந்த காலத்தில் இருந்து ஈழத்தமிழரின் மரபுரிமைகள் மறைந்து போகின்றன
அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஆதங்கமும், கோரிக்கைகளும் தமிழர்கள் மத்தியில் மேலோங்கிக் காணப்பட்டன இதனால் தமிழர்களின் மரபுரிமைகள் ஆவணப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது இந் நிலையில் இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு, ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள் ஆகிய இவ்விரு நூல்கள் வெளியீடுவதற்கு காரணம் என்னவெனில் சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழி பாடநூல் தொடர்பாக பேராசிரியர் அ.சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ், பேராசிரியர் தி.சிவலிங்கராஜா ஆகியோருடன் இணைந்து நடாத்திய கலந்துரையாடலின் போது அதில் கலந்துகொண்ட அந்நாட்டு தமிழ்க் கல்வியாளர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் தமது பிள்ளைகளுக்குரிய தமிழ் பாட நூல்களில் இடம்பெற்றிருக்கும் இலங்கை வரலாற்றைக் கற்பதிலும் கற்பிப்பதிலும் ஆசிரியர்களும், மாணவர்களும் ஆர்வம் குறைவாக இருப்பதால் அப்பாடங்களை தமிழ் மொழிப் பாடநூல்களில் இருந்து அகற்றுமாறு கூறினர். இதற்கு இலங்கை வரலாற்றுப் பாட நூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்த இந்நூல்களில் தமிழர் வரலாற்றையோ, தமிழர் பண்பாட்டையோ தெரிந்து கொள்ள முடியாதிருந்தமை முக்கிய காரணம் என்பதை எம்மால் உணரமுடிந்தது இந்நிலையில் அந்நாட்டில் வரலாறு கற்பிக்கும் ஆசிரியர்களுக்காக எம்மால் நடாத்தப்பட்ட கருத்தரங்குகளில் இலங்கைத் தமிழர் வரலாறு, தமிழர் பண்பாடு, தமிழர் மரபுரிமை தொடர்பான விடயதானங்களை முன்னிலைப்படுத்திக் கூறப்பட்ட போது அதில் கலந்து கொண்ட பலரும் தமது முன்னைய கருத்துக்களை மாற்றி நாம் முன்னிலைப் படுத்திய பாட விதானங்களையே தமக்குறிய வரலாற்று வரலாற்றுப் பாட நூல்களில் சேர்த்து ஆசிரியர்களுக்கான ஒரு வரலாற்றுப் பாடநூல் எழுதப்பட வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தினர். அவர்களின் வேண்டுதலை நிறைவு செய்யும் நோக்கிலேயை இந்நூல் எழுதப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார் ஆகவே இவ்விரு நூல்களும் ஈழத்தமிழர் வரலாற்றையும் பாரம்பரிய மரபுரிமைகளை அறிந்து கொள்ளவும் பெருந்துணையாய் அமைகின்றது
No comments:
Post a Comment