யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறையின் தலைவர் ,தொல்லியல் பிரிவு (பணிப்பாளர் மத்திய கலாசார நிதியம்) சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் அவர்களின் "இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு" மற்றும் "ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்" ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 19.08.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கம் உருத்ரா மாவத்தை கொழும்பு - 06ல் பேராசிரியர் சி.தில்லைநாதன் வாழ்நாள் பேராசிரியர்
பேராதனைப்பல்கலைக்கழகம் தலைமையில் நடைபெறவுள்ளது.
காலத்திலிருந்து ஈழத்தமிழரின் மரபுரிமைகள் மறைந்து போகின்றன அவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற ஆதங்கம், கோரிக்கைகளின் அடிப்படையில் மரபுரிமைச் சின்னங்களை எவ்வாறு கண்டறிந்து ஆவணப்படுத்துவது என்பது தொடர்பாக "ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்" என்ற நூலையும் ஆக்கியுள்ளார்.
இவ் இரு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்....
No comments:
Post a Comment