சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணத்தின் "இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு" மற்றும் "ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள் நூல் வெளீயீட்டு விழா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறையின் தொல்லியல் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் அவர்களின் "இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு" மற்றும் "ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்" ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 18.01.2018 வியாழக்கிழமை பிற்பகல் 03 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் தொல்லியல் ஆய்வு வட்டத்தலைவர் கந்தசாமி கிரிகரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
தனது தொல்லியல் கண்டுபிடிப்புக்கள் மூலம் ஈழத்தமிழர் வரலாறு, பண்பாடு, தமிழர் மரபுரிமை தொடர்பான விடயங்களை முதன்மைப்படுத்தி தமிழரின் இருப்பு பற்றிய விடயங்களை அறிவியல் சார்ந்தும், தொல்லியல் ஆய்வுகள் முன்வைத்த முடிவுகள் சார்ந்தும் "இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு" என்ற நூலையும், ஈழம் சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து ஈழத்தமிழரின் மரபுரிமைகள் மறைந்து போகின்றன அவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற ஆதங்கம், கோரிக்கைகளின் அடிப்படையில் மரபுரிமைச் சின்னங்களை எவ்வாறு கண்டறிந்து ஆவணப்படுத்துவது என்பது தொடர்பாக "ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்" என்ற நூலையும் ஆக்கியுள்ளார். இவ் இரு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்....
Sunday, 14 January 2018
Subscribe to:
Post Comments (Atom)
சண்டிலிப்பாய் கிராமத்தில் அரிய தமிழ்க் கல்வெட்டு
சண்டிலிப்பாய் கிராமத்தில் அரிய தமிழ்க் கல்வெட்டு ********************************************** சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் நிர்வாகப் பி...
-
வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் - 01 1. ஒரு நாட்டின் அல்லது ஒரு பிரதேசத்தின் வரலாற்றை வெளிச்சம் இட்டு காட்டுவனவாக வரலாற்று மூலாதாரங்கள...
-
இலங்கையின் குடியேற்றங்கள் இலங்கையில் ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் (125000) ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் மனிதன் வாழ்ந்திருந்தான். ...
-
எமது கலாச்சார மரபுரிமை. • மரபுரிமை என்றால்; :-எமது முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக பின்வற்றிவந்த பழக்கவழக்கம், வழிபாடு நம்பிக்கை கர்ணபர...
No comments:
Post a Comment