2500 ஆண்டு பழமையான 59 மம்மி சவப்பெட்டிகள்: ஊடகத்திற்கு முன்பு திறப்பு-கிடுகிடுக்க வைத்த காட்சி!
எகிப்தில் உள்ள தொல்பொருள் ஆய்வாளர்கள் சனிக்கிழமையன்று, 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட 59 சவப்பெட்டியை கண்டுபிடித்துள்ளனர். 2500 ஆண்டுகள் பழமையான மம்மிகள் 2500 ஆண்டுகள் பழமையான மம்மிகள் அனைத்தும் நன்கு பாதுகாக்கப்பட்டுப் பதப்படுத்தப்பட்டுள்ளது.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான பண்டைய எகிப்திய தலைநகரான மெம்பிஸின் நெக்ரோபோலிஸான சக்காராவின் பரந்த புதைகுழியில் கெய்ரோவுக்கு தெற்கே இந்த கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. மரத்தினால் ஆனா சர்கோபாகி கூடியிருந்த ஊடகங்களுக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட மரத்தினால் ஆனா சர்கோபாகி (sarcophagi) சவப்பெட்டி ஒன்றைத் திறந்து, அடக்கம் செய்யப்பட்ட துணியில் மூடப்பட்டிருந்த மம்மியின் உருவத்தை ஆராய்ச்சி குழு ஊடகத்திற்கு முன்பு வெளிப்படுத்தியது.
அதிர வைத்த 63 வயது பெண்ணின் செயல்: 19 வருடமாக செய்த ஏமாற்று வேலை அம்பலம்! மம்மிகளின் மேல் ஹைரோகிளிஃபிக் (hieroglyphic) எழுத்துக்கள் 2500 ஆண்டுகள் பழமையான மம்மிகளின் உடல் மூடப்பட்டிருந்த துணி மற்றும் கல்வெட்டுகளில் ஹைரோகிளிஃபிக் (hieroglyphic) எழுத்துக்கள் பிரகாசமான வண்ணங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
முதலில் 13 சவப்பெட்டிகள் "இந்த கண்டுபிடிப்பு குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்," என்று பழங்கால உச்ச கவுன்சிலின் பொதுச் செயலாளர் மொஸ்டபா வஜீரி கூறினார். முதல் 13 சவப்பெட்டிகளின் கண்டுபிடிப்பு கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது, ஆராய்ச்சி குழு 12 மீட்டர் (40 அடி) ஆழத்தில் மீண்டும் தனது ஆராய்ச்சியைத் துவங்கிய பொழுது இன்னும் பல மம்மியின் சவப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஓடும் லாரியை துப்பாக்கியுடன் சேஸ் செய்து 10 கோடி மதிப்புடைய போன்கள் கொள்ளை! சிக்கியது எப்படி? 4,700 ஆண்டுகள் பழமையான பிரமிடு அறியப்படாத கூடுதல் சவப்பெட்டிகள் இன்னும் அங்கே புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சுற்றுலா மற்றும் பழங்கால அமைச்சர் கலீத் அல்-அனானி கூறியுள்ளார்.
இந்த சவப்பெட்டிகள் அனைத்தும் 4,700 ஆண்டுகள் பழமையான ஜோசரின் பிரமிடுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். இது முடிவில்லை.. இதுவே துவக்கம் "எனவே இன்று கண்டுபிடிப்பின் முடிவு அல்ல, இது பெரிய கண்டுபிடிப்பின் தொடக்கமாக நான் கருதுகிறேன்" என்று அவர் கூறியுள்ளார். 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் சீல் வைக்கப்பட்ட சவப்பெட்டிகள், பண்டைய எகிப்தின் பிற்பகுதியில், கிமு ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டிலிருந்து வந்தவை என்று குழுவின் அமைச்சர் தெரிவித்துள்ளார்
Google எச்சரிக்கை: பிளே ஸ்டோரிலிருந்து 34 மால்வேர் ஆப்ஸ்கள் நீக்கம்! உங்க போனில் இவை இருக்கக்கூடாது! மம்மியாக்கப்பட்ட வண்டு..பாம்பு..சிங்கம்.. சக்காராவின் அகழ்வாராய்ச்சிகள் சமீபத்திய ஆண்டுகளில் கலைப்பொருட்கள் மற்றும் மம்மியாக்கப்பட்ட பாம்புகள், பறவைகள், ஸ்காராப் வண்டுகள் மற்றும் சிறிய வகை சிங்கங்கள் எனப் பலவிதமான பிற விலங்குகளின் மம்மிகளை கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தாமரை மலரின் பண்டைய கடவுள் தாமரை மலரின் பண்டைய கடவுளான நெஃபெர்டெமை சித்தரிக்கும் வெண்கல சிலை உட்பட டஜன் கணக்கான சிலைகளும் இப்பகுதியில் காணப்பட்டுள்ளது. இன்னும் பலவிதமான தெய்வ சிலைகளும், சிற்பங்களும், விலங்குகளின் சிற்பங்களும் கிடைக்கப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது. 26 வது வம்சத்தின் பண்டைய பாதிரியார்கள் எகிப்திய சமுதாயத்தின் 26 வது வம்சத்தின் பண்டைய பாதிரியார்கள், மூத்த அரசியல்வாதி மற்றும் முக்கிய நபர்களின் சர்கோபாகியாக இவை இருக்கலாம் என்று முதற்கட்ட ஆய்வுகள் சுட்டிக்காட்டுவதாக அனானி கூறியிருக்கிறார்.
59 சவப்பெட்டிகளும் விரைவில் திறக்கப்படும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 59 சவப்பெட்டிகளும் கிசா பீடபூமியில் வைத்து விரைவில் திறக்கப்பட்டு, மேற்கொண்டு ஆராய்ச்சிகள் நடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து சவப்பெட்டிகளும் கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான கூடுதல் தகவல்கள் வரும் காலத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment